InnerPeace Counselling Session

  • Home
  • InnerPeace Counselling Session

Samples of Successful Past counselling sessions handled by Inner Peace

We provide Tamil/English Language based online counselling in areas related to Education, Career guidance, Behavioural & Family counselling.

Please Note: Based on International Counselling ethics – name and gender of our client has been changed .

1. என் பெயர் ராகவன் நான் IT Company-ல் வேலை பார்த்தேன். திடிர் என்று Performance-சரியில்லை என்று வேலையை விட்டு அனுப்பிவிட்டார்கள். நான் அதை நம்பி தான் வீட்டு கடன் வாங்கினேன். எனக்கு வேலை போனதால் என்னால் சரியாக கடனை கட்டி வரமுடியவில்லை. நான் இப்பொழுது சிறு Company-ல் தான் வேலை பார்க்கிறேன். எனக்கு இப்பொழுது சொந்த வீடும் இல்லை, நிலையான வேலையும் இல்லை எப்படி இதிலிருந்து வெளிவரவேண்டும் என்று கூறுங்கள்.
Successfully handled by inner peace team.

2. Dear Sir என் பெயர் விக்ரம் நான் B.E முடித்து 7வருடங்கள் ஆகிறது. ஆனால் நான் படித்த படிப்புக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக வீட்டில் நிறைய பிரச்சனைகள். இதனால் என் மேல் எனக்கு வெறுப்பு அதிகமாகி கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இதில் இருந்து எப்படி வெளி வர வேண்டும் என்று தெரியவில்லை.
Successfully handled by inner peace team.

3. Dear Sir என் பெயர் திவ்யா நான் BSW படித்துள்ளேன் மேலும் நான் எந்த PG டிகிரி படித்தால் எனக்கு வேலை கிடைக்கும். எவ்வாறு என்னை Career-ல் வளர்த்து கொள்வது?
Successfully handled by inner peace team.

4. ஹலோ சார் என் பெயர் மோனிகா. நானும் என் கணவர் இருவரும் வேலைக்கு செல்கிறோம். எங்கள் குழந்தையை பார்த்து கொள்ள ஆளில்லை. இதனால் என் கணவர் என் வேலையை விட சொல்கிறார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். இதனால் எங்கள் இருவருக்கும் நிறைய பிரச்சனைகள் வருகிறது.
Successfully handled by inner peace team.

5. என் பெயர் போஷிகா. எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. என் கணவர் எப்பொழுதும் Alcohal அருந்திவிட்டு என்னிடம் வந்து தவறான வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்துகிறார். இதனால் பல முறை என்னை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டு சந்தேகத்துடனேயே பேசுகிறார். இதனால் நான் கடும் மன உளைச்சலில் அவதிப்படுகிறேன்.
Successfully handled by inner peace team.

6. என் பெயர் பாலு எனக்கு சில வருடமாக மனதளவில் பிரச்சனைகள் உள்ளது போலே உணருகிறேன். என்னை யாராவது அடிக்கிறது போலேயும், சாப்பாட்டில் ஏதாவது கலந்து இருக்கிறது போல எனக்கு சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது. ஏதாவது ஒரு வேலை செய்தால் அதை அடிக்கடி சரியாக செய்து இருக்கிறேனா என்று சரிபார்த்து கொண்டே இருக்கிறேன். நல்ல முடிவு சொல்லுங்கள்.
Successfully handled by inner peace team.

7. Dear Sir, என் பெயர் ஹரிஷ் நான் ஒரு பெண்னை 7 வருடமாக தீவிரமாக காதலித்தேன் நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய இடத்திற்கு சென்றோம் ஆனால் அவள் வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கவில்லை என்று அவள் அவர்கள் வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்து கொண்டாள். இதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு கூட வந்து விட்டேன்.
Successfully handled by inner peace team.

8. ஹலோ சார். என் பெயர் கிருத்திகா என் மகனுக்கு 4 வயது ஆகிறது. ஆனால் அவனுக்கு இன்னும் சரியாக பேச வரவில்லை. அவன் 4 வயதுக்கு செய்ய வேண்டிய எந்த செயலையும் அவனால் செய்ய முடியவில்லை. அவனுக்கு 4 வயது ஆகியும் அவன்11/2 வயது குழந்தையை போல் தான் இருக்கிறான். நான் எந்த வழியில் என் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்குங்கள்.
Successfully handled by inner peace team.

9. எனது பெயர் ராகவி எனக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகின்றது. எனது கணவருக்கு தந்தை கிடையாது. தாய் மட்டும் தான் ஒரே மகன் அவர். என் கணவருடன் நான் எங்கு வெளியில் சென்றாலும், என் மாமியார் ஏதாவது ஒரு பிரச்சனை செய்கின்றார். அவருக்கு அவர்கள் தாய் தான், ஆனால் நான் அவரது மனைவியல்லவா. எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகம் வருகின்றது. ஏதேனும் அறிவுரை வழங்குங்கள்.
Successfully handled by inner peace team.

10. நான் ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தவன். 1 வருடத்திற்கு முன் ஒரு கார் விபத்தில் என் இரு காலிலும் அடிபட்டு என்னால் நடக்க இயலாமல் போய்விட்டது. இதனால் என் வேலையை இழந்தேன், தற்போது குடும்பத்தை பராமரிக்கமுடியவில்லை என் குழந்தைகளும் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். நான் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவன். தற்போதையை சூழலில் நம்பிக்கை இழந்த குழப்பத்தில் உழல்கிறேன். மீண்டு வர வழி நாடுகின்றேன்.
Successfully handled by inner peace team.

11. என் பெயர் நித்யா எனக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. எனது குழந்தை Mentally Retarded Children. அவன் செய்யும் செயலை பார்த்து என் கணவருக்கு கோபம் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் என்னுடன் அடிக்கடி சண்டை போட்டு எங்கேயோ சென்று விடுகிறார். வருடத்தின் பாதி நாட்கள் நானும் எனது குழந்தையுமே தனியாக இருக்கின்றோம். இப்பொழுது அவர் என்னிடம் விவாகரத்து கேட்டு பிரச்சனை செய்து கொண்டே இருக்கிறார். இதற்கு நல்ல ஆலோசனை கூறுங்கள்.
Successfully handled by inner peace team.

12. என் பெயர் பத்மாவதி. என் கணவர் இறந்த பிறகு என் இரண்டு மகன்களையும் நன்கு படிக்க வைத்தேன். இருவரும் வெளிநாட்டில் பணி புரிகின்றனர். என்னை தற்போது Old age home-ல் ஒரு இருக்க வைத்து உள்ளனர். இங்கு அன்பை தவிர அனைத்தும் கிடைக்கின்றது. வாழ்க்கை வெறுமையாக உள்ளது. நீங்கள் நல்ல ஆலோசனை கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளேன்.
Successfully handled by inner peace team.