Happiology

  • Home
  • Enna Padikalam

Happiology

Posted by InnerPeace - Yasodha January, 20th 2019
blog image

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வழிகளை தேடுகின்றோம். சிலர் அதற்கான வழியை கண்டுபிடிக்கின்றார்கள். சிலர் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியை தேட முடியாது அல்லவே. கவலை வேண்டாம் அறிவியல் வல்லுநர்கள் இதற்கு அறிவியல் பூர்வமாக அனுகுவதற்கு முயன்றுள்ளனர். ஒவ்வொருவரும் தாங்கள் சிரிப்பதற்கு தினமும் ஏதேனும் காரணங்கள் வைத்துள்ளோம். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் உள்ளே இருக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதே மகிழ்ச்சியாலஜி (ர்யிpல-ழடழபல). மகிழ்ச்சி என்பது அதை அனுபவிப்பதற்கான தருணம் என்பது அல்ல, மகிழ்ச்சிக்காக அந்த தருணத்தை மாற்றுவது தான். நாம் கோபமூட்டப்பட்டாலோ, சோகமோ, அல்லது வெறுப்பான சூழல் வந்தாலும் நீங்கள் உங்கள் உணர்வுகளை மகிழ்ச்சியை நோக்கி அழுத்தமாக மாற்றலாம். எது நமக்கு மகிழ்ச்சி தரும் என்ற கேள்விக்கு பதில் அது நம் கையில் உள்ளது என்பது தான் சரியான பதில். அறிவியல் வல்லுநர்கள் மகிழ்ச்சி என்பதற்கு ஒரு அளவிட்டு கூற முடியாத நிலை உள்ளதாக கூறுகின்றனார்கள். மகிழ்ச்சியை பெரிய விஷயங்களில் தேடுவதை விட சின்ன சின்ன விஷயங்களிலும் உணருங்கள். சிறிய விஷயங்களிலும் உள்ள மகிழ்ச்சியை கூட புரிந்துகொள்ள முடியாத பொழுது மகிழ்ச்சி கிடைக்காமல் போய் விடும். “உங்களில் உள்ள மகிழ்ச்சியை தேடுங்கள்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் மிரியம் லியலிகர் அவர்கள் தினந்தோறும் நமது வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளில் ஏற்படும் அனுபவங்கள் மூலமாக ஏகப்பட்ட மகிழ்ச்சிகள் அடங்கியிருப்பதாக கூறுகின்றார்.

Happy-ology என்பது சாதாரன அல்லது அசாதாரன நிகழ்வுகளிலும், கடினமான சூழ்நிலைகளிலும் கூட மகிழ்ச்சியை தேடுவதாகும். சுசானா ஹாலன் என்பவர் தன்னை மகிழ்ச்சி நிறைந்தவர் என்று கூறுகிறார். அவருக்கு அதிகபடியான நேர்மறை எண்ணங்கள் உள்ளவர். நல்ல தரமான வேலையில் இருந்த பொழுதும் அந்த வேலையை விட்டுவிட்டு தனக்கு பிடித்த செல்ல பிராணிகள் வளர்பதில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த நாட்களில் அவருக்கு BMW(American express) போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை கிடைத்த பொழுதும் தனது மகிழ்ச்சிக்காக அந்த வேலையை அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர் தனது வளைதலத்தில் மகிழ்ச்சியை வாங்குவதில் உள்ள கட்டுக்கதைகளை நம்பவில்லை. நாம் வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால் மகிழ்ச்சியடைவதில்லை. மாறாக மகிழ்ச்சியாக இருந்தாலே நமக்கு நம்பிக்கை, படைப்புத்திறன், மற்றும் செயல்பாடு திறன் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

மகிழச்சியாக வாழ்வதற்கு தாம் முதலில் பழக வேண்டும், அதற்கும் எல்லையில்லை. உங்களை சுற்றி நடக்கும் எதிர்மறை எண்ணம் உடைய நபர்களிடமிருந்து விலகி இருங்கள் இல்லை என்றால் அவர்களிடம் மற்றும் புன்னகையுடன் நடந்து கொள்ளுங்கள்.

தினமும் 20 முறை சிரியுங்கள், 20 முறை புன்னகையுங்கள் என்று சொல்கிறார் ஒரு அறிவியளாலர். எப்பொழுதெல்லாம் நீங்கள் புன்னகைக்கிறீர்கலோ அப்பொழுதெல்லாம் செரோடினின் என்ற சுரபி சுரப்பதாகவும் இது மூளையின் செயல்பாட்டிற்கு ஏற்றது என்று கூறுகின்றார். அதிகமாக புன்னகை செய்யும் நபர்களிடம் எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்துள்ளது என்றும் அதிகமாக சிரிக்கும் பொழுது ஒருவருக்கு செரிமான சக்தி அதிகரிப்பதுடன் நல்ல எண்ணங்கள் வருவதாகவும் கூறுகின்றார்.

மகிழச்சியை வளர்க்கும் முறையை பற்றி வாழ்க்கை பயிற்சியாளர் ரெஹா பஞ்சாபி அவர்கள் நமது பழக்கத்தில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்கிறார்.

1. சிறிய முயற்சிகள் மூலம் நாம் நமது மூளைக்கு நமக்கு உதவியற்ற அல்லது தேவையில்லாத எண்ணங்களையும் அதனால் நமக்கு துன்பம் தரும் செயல்களை தவிர்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும்.

2. எதிர்மறை எண்ணங்கள் எழும்பொழுது புன்னகைத்து கொண்டே நம் எண்ணத்தை நேர்மறையில் மாற்ற முயற்சி செய்யலாம்.

3. நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் திரும்பி வரப்போவதில்லை. ஒரு நாள் வருத்தத்துடன் சென்றால் ஒரு நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக மாறும்.

ஒருவர் ஒவ்வொரு நாளும் சிறிய மாற்றத்துடன் வாழ ஆரம்பித்தால் மகிழ்ச்சியாக வாழ்வது கடினமில்லை. உங்களுக்கு பிடித்த பாடலை காரில் செல்லும் பொழுது கேட்பது, உங்களது பிஸியான நேரத்தில் சாலையை கடக்க உதவுவது, நனைந்த புதர் தரையில் நடந்து செல்வது, உங்கள் துனையுடன் உங்களுக்கு பிடித்த படம் பார்ப்பது, உங்கள் நண்பர்களை நீண்ட நாள் பிறகு சந்திப்பது இப்படி சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் மகிழச்சியான வாழ்க்கையை நோக்கி நகரக்கூடும்.

கவுதம் ராடே என்ற நடிகர் “ எனக்கு மகிழ்ச்சி என்பது எந்த வித மன அழுத்தம் இல்லாத மனநிலை, உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்வது மனதுக்கு நல்ல மாற்றத்தையும் மகிழ்ச்சியும் தருகிறது என்கிறார்.

hima khan என்ற நடிகர் “எனது பால்கனியில் அமைதியாக அமர்ந்து கொண்டு எனக்கு பிடித்த காபியை மகிழ்ச்சியாக குடிப்பதே மன நிறைவவை தருவதாக கூறுகின்றனர்.

உங்களுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவிடுங்கள் உங்கள் குழiந்தைகளுடன் அதிக நேரம் ஒதுக்குங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். எதற்கும் கவலை படாதீர்கள் இந்த நொடியை மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

HAVE 0 COMMENTS
Leave your thought


Can't read the image? click here to refresh.